ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு டாட்டா சன்ஸ் நிஐவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது....
கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க டாட்டா சன்ஸ் தலைமை நிதி அதிகாரி சௌரப் அகர்வால் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயாலுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக மின்ட் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி குறிப்பில், ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயலுடன் டாட்டா சன்ஸ் முதன்மை நிதி அதிகாரி சௌரப் அகர்வால் பேச்சு நடத்தி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தப் பேச்சு அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, குறைவான கட்டணம், தொழில் போட்டி ஆகியவற்றின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் குறைந்த இலாபம் வரும் தடங்களில் விமானங்களை இயக்குவதை நிறுத்திவிட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் உள்-குழு தற்போது ஜெட் ஏர்வேஸில் விடாமுயற்சி செய்து வருகிறது, இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது," என அந்த நாளிதழில் தெரிவித்துள்ளது.