Tech Tips: ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க சில ‘Password’ டிப்ஸ்..!

இணையத்தின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், நாம் ஆன்லைனில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மிகவு கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஹேக்கிங் மோசடிகளுக்கு பலியாக நேரிடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 5, 2022, 09:54 AM IST
  • ஹேக்கிங்கைத் தவிர்க்க, சில பாஸ்வேர்டுகளை பயன்படுத்தவே கூடாது
  • கண் இமைக்கும் நேரத்தில் கணக்கை ஹேக் செய்துவிடலாம்
  • பாதுகாப்பாக இருக்க மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
Tech Tips: ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க சில ‘Password’ டிப்ஸ்..! title=

பொதுவாக நம் அனைவருக்கும் கடவுச்சொல் அதாவது பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல் கணக்கு இருக்கும்.  சமூக ஊடக தளங்கள் அல்லது பிற செயலிகளின் கணக்குகளாக இருந்தாலும், பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொற்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஹேக்கிங்கிற்கு எளிதில் பலியாகக்கூடிய அத்தகைய சில கடவுச்சொற்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். கூடுதலாக, ஹேக்கிங்கைத் தவிர்ப்பது மற்றும் உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பதையும்  அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்

இணையத்தின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், நாம் ஆன்லைனில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மிகவு கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஹேக்கிங் மோசடிகளுக்கு பலியாக நேரிடும். நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று,  பயனர்களின் கடவுச்சொற்களாகும். நீங்கள் தவிர்க்க வேண்டிய கடவுச்சொற்கள்,  ஹேக்கர்களுக்கு மிகவும் எளிதான இலக்காக இருக்கும் கடவுச்சொற்கள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | அதிரடி சலுகை! OPPO 5G ஸ்மார்ட்போனை வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம்!

தவிர்க்க வேண்டிய கடவுச்சொற்கள்

சில காலத்திற்கு முன்பு, இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் பயனர்கள் பயன்படுத்தக்கூடாத கடவுச்சொற்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. '123456', '123456789', 'Qwerty', 'Password' மற்றும் '1111111' ஆகியவை கணக்குகளை ஹேக்கிங்கி செய்ய வழிவகுக்கும் பொதுவான கடவுச்சொற்கள் என கூறப்பட்டுள்ளது.

கடவுச்சொல்லை அமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை

நீங்கள் அமைக்கும் கடவுச்சொல் எனப்படும் பாஸ்வேர்ட், குறைந்தது 8-12 எழுத்துக்கள் நீளமாக இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கவும். இவற்றில் எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துகள் அனைத்தும் இருக்க வேண்டும். உங்கள் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றுவதும் பாதுகாப்பாக இருக்க ஒரு சிறந்த வழியாகும். உங்கள் கடவுச்சொல்லுடன், இரண்டு காரணி அங்கீகார அம்சத்தையும் பயன்படுத்தவும், இதனால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News