TRAI's New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க அரசாங்கம் ஏற்கனவே முயற்சித்து வரும் போதிலும், ஸ்பேம் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இன்னலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. 2024 செப்டம்பர் 1ம் தேதி முதல், நாடு முழுவதும் போலி மற்றும் ஸ்பேம் அழைப்பு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் புதிய விதியை TRAI அமல்படுத்த உள்ளது.
மோசடி அல்லது ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI (Telecom Regulatory Authority of India) எச்சரித்துள்ளது. சிம் கார்டை முடக்குவது உள்ளிட்ட புதிய விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்பதால், ஸ்பேம் கால்கள் செய்ய தங்கள் எண்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய விதிகளின் மூலம், அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சூழலை உருவாக்குதே நோக்கம் எனக் கூறியுள்ள TRAI, இதனால் போலி அழைப்புகள் மற்றும் மோசடிகளை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளது.
ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
மக்களுக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை புதிய விதியின் மூலம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். வாடிக்கையாளர் ஸ்பேம் அழைப்புகள் பெற்றது குறித்து புகார் அளித்தால், தொலைத்தொடர்பு நிறுவனம் சிக்கலைத் தீர்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
TRAI விடுத்துள்ள எச்சரிக்கை
வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க புதிய விதிமுறைகள் கடுமையாக வகுக்கப்பட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். TRAI ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி மற்றும் விளம்பர அழைப்புகளை மேற்கொள்ள மோசடி முறைகளைப் பயன்படுத்துவது தொலைத்தொடர்பு விதிகளை மீறுவதாகும் என்றும் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சிறந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் TRAI தெளிவுபடுத்தியுள்ளது.
மொபைல் எண் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்படும்
டெலிமார்க்கெட்டிங் அல்லது விளம்பரத்திற்காக தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறிப்பிட்ட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் நிறுவனம், குறிப்பிட்ட நன்பரது தொலைபேசி எண் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்படும் எனவும் கூறியுள்ளது. மோசடியை தடுக்கும் வகையில் அரசாங்கம் ஏற்கனவே 160 எண் தொடரை தொடங்கியுள்ளது. ஆனால் பலர் இன்னும் தனிப்பட்ட எண்களில் இருந்து விளம்பர அழைப்புகளைப் பெறுகிறார்கள் என்பதால், கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டிய அவச்யம் உருவாகியுள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ