ட்விட்டர் பற்றிய ஒரு மிகப்பெரிய செய்தி வந்துள்ளது. இனி பயனர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று ட்விட்டரிலும் ட்வீட் செய்த பிறகு அதை எடிட் செய்ய, அதாவது திருத்த முடியும். இதற்கான எடிட் பட்டனை ட்விட்டர் தொடங்கியுள்ளது! இருப்பினும், முதலில் சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைட்) கணக்குகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ட்வீட்டை எடிட் செய்யும் வசதி வேண்டும் என்று பயனர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கும் ட்வீட் செய்து எடிட் பட்டனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு வரை, எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த ஒப்பந்தம் இப்போது சில தடைகளை சந்தித்துள்ளது. ட்விட்டரில் எடிட் பட்டன் இல்லாததும் ஒரு முக்கிய தடையாக இருந்தது.
ட்வீட்டை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யலாம்
ட்வீட் செய்த பிறகு, அடுத்த அரை மணி நேரத்தில் பயனர்கள் அதை எடிட் செய்ய முடியும். ட்விட்டர் தற்போது இதற்கான சோதனையை தொடங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் கணக்கில் எடிட் பட்டனைப் பார்த்தால், அது சோதனைக்காக உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ட்விட்டர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் கணக்கு சரிபார்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே (வெரிஃபைட் அகவுண்ட்) இந்த வசதி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்வீட்டின் அசல் ஹிஸ்டரி அப்படியே இருக்கும்
நீங்கள் ஒரு விஷயத்தை ட்வீட் செய்து, பின்னர் அதை மாற்ற நினைத்தால், மாற்றுவதற்கான வசதி கிடைக்கும். ஆனால், அந்த செய்தியின் முழு ஹிஸ்டரியும் பக்கத்தில் தெரியும். அதாவது, முதல் ட்வீட்டில் இருந்து மாற்றப்பட்ட ட்வீட் வரை அனைத்தும் காணப்படும்.இந்தியாவில் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பதை சொல்வது கடினம்.எனினும், வெரிஃபைட் ட்விட்டர் பயனர்களுக்கு இந்த வசதி நிச்சயம் கிடைக்கும். இதனுடன், உங்கள் ட்வீட்டை பார்க்கும் நபர்கள், ட்வீட் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்வார்கள்.
if you see an edited Tweet it's because we're testing the edit button
this is happening and you'll be okay
— Twitter (@Twitter) September 1, 2022
மேலும் படிக்க | உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப ரூ.200க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்
கவனமாக இருக்க வேண்டும்
எடிட் செய்யும் வசதி இருப்பதால், முதலில் தேவையற்ற அல்லது சர்ச்சைக்குரிய எதையாவது ட்வீட் செய்துவிட்டு, பிறகு திருத்த்திக்கொள்ளலாம் என நினைப்பது தவறு. ஏனெனில், அசல் ட்வீட்டில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பயனர்களால் பார்க்க முடியும்.
பயனர்களுக்கு நல்ல செய்தி
ட்விட்டர் 320 மில்லியன் செயலில் உள்ள (ஆக்டிவ் யூசர்ஸ்) பயனர்களைக் கொண்டுள்ளது. ட்விட்டர் பயனர்கள் எடிட் பட்டனை நீண்ட காலமாக கோரி வந்தனர். அடுத்த ஓரிரு நாட்களில் பயனர்களின் ட்விட்டர் கணக்கில் எடிட் பட்டன் தெரிவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி வேலை செய்யுமா? இப்படி தெரிந்துகொள்ளலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ