Oppo நிறுவனம் Reno7 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. அதே சமயத்தில் 1.64 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட Oppo Watch Free மற்றும் Enco M32 இயர்போன்களும் வெளியிடபட இருக்கிறது. Oppo நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மொபைல்களின் அறிமுகத்தை இன்று 12 மணியளவில் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்புகிறது.
சீனாவில் முன்னரே Oppo Reno7 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது கூடுதல் மாற்றங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. தற்போது Oppo Reno7 5G சீரிஸ் Reno7 5G மற்றும் Reno7 Pro 5G ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே நிறுவனம் Reno7 Pro 5G ஆனது புதிய Dimensity 1200 MAX சிப்செட்டை இயக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது Dimensity 1200 செயலியின் லேட்டஸ்ட் வெர்ஷனாகும், 1200 Maxல் 5nm ARM Cortex-A78 சிப்செட் உள்ளது.
மேலும் இதில் HDR தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொபைல்களில் வீடியோக்கள் தரங்களை மேபடுத்த முடியும், வீடியோவை சிறந்த முறையில் பல அம்சங்களை பயன்படுத்தி எடிட் செய்துகொள்ளலாம். இந்த வகை மொபைலில் 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது கூடுதலாக 3 GB அல்லது 5 GB அல்லது 7 GB வரை RAMகளை பெற்றுக்கொள்ளும் விரிவான வசதியையும் வழங்குகிறது. இது Oppo-ன் புதிய ColorOS 12 ஸ்கின் மூலம் இயங்குகிறது, மேலும் இது 65W SuperVooc வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
Oppo Reno7 சீரிஸ் மொபைலானது கேமரா செயல்பாட்டில் அதிகமாக கவனம் செலுத்துகிறது, அதிலும் குறிப்பாக selfies மற்றும் portrait பயன்பாட்டில் அதிக மேம்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. Reno7 Pro பின்புறத்தில் மூன்று கேமராக்களையும், முன்பக்கத்தில் 32MP என்ற கேமராவையும் கொண்டிருக்கிறது. இதில் Sony IMX709 அல்ட்ரா சென்சிங் சென்சார் உள்ளது. RGB சென்சார்களுடன் ஒப்பிடும் போது, முன் கேமராவின் சென்சார் ஒளி 60 சதவீதம் அதிக உணர்திறன் கொண்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR