அதிநவீன விவோ வி40 5ஜி போன் மார்க்கெட்டுக்கு வந்தாச்சு! அறிமுகச் சலுகை விலை எவ்வளவு தெரியுமா?

AMOLED திரை மற்றும் 5500mAh பேட்டரி கொண்ட Vivo V40 5G போன் விற்பனை தொடங்கிவிட்டது. 3 மாடல்கள், விலை என்ன? முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2024, 01:12 PM IST
  • விவோ வி40 5ஜி போன்
  • அறிமுக விலை எவ்வளவு?
  • ப்ளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கியது
அதிநவீன விவோ வி40 5ஜி போன் மார்க்கெட்டுக்கு வந்தாச்சு! அறிமுகச் சலுகை விலை எவ்வளவு தெரியுமா? title=

vivo v40 5g :விவோ நிறுவனம் அண்மையில் வெளியிட்ட Vivo V40 5G போனின் விற்பனை இன்று (ஆகஸ்ட் 19, 2024) தொடங்கியது. இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு இந்த விற்பனை தொடங்கிய விற்பனையில் சிறந்த தள்ளுபடி சலுகைகளில் விவோ வி40 5ஜி போன்கள் கிடைக்கின்றன.  விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே மற்றும் குவால்காமின் சக்திவாய்ந்த செயலி பொருத்தப்பட்டுள்ளது. 

50MP கேமராவுடன், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரிகொண்ட விவோ V40 மொபைலின் விலை மற்றும் தள்ளுபடி சலுகை விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

விவோ வி40 5ஜி மாடல்கள்  
ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, விவோ வி40 5ஜியை பல வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 8ஜிபி + 128ஜிபி,  8ஜிபி + 256ஜிபி மாடல், டாப் வேரியன்ட் 12ஜிபி + 512ஜிபி  என மூன்று மாடல்களில் விவோ வி40 போன் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | சாம்சங் கேலக்ஸி போனுக்கு ரூ 18000 வரை தள்ளுபடி! இதைவிட அதிக சலுகை கிடைக்காது!

விலை விவரம்
8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.34,999
8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.36,999
டாப் வேரியன்ட் 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.41,999 

எக்ஸ்சேஞ்ச் சலுகை
முன்னணி வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலம், விவோ வி40 போனுக்கான பணம் செலுதினால், விலையில் இருந்து ரூ.3700 தள்ளுபடி கிடைக்கும். அதேபோல, கட்டணமில்லா EMI மற்றும் ரூ.35,950 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் தற்போது கிடைக்கிறது.

Vivo V40 விவரக்குறிப்புகள்
Vivo V40 5G போன் 1.5K ரெசல்யூசன் மற்றும் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் 120Hz, தொடு மாதிரி விகிதம் 480Hz மற்றும் உச்ச பிரகாசம் 4500 nits என்ற அளவில் உள்ளது.  HDR10+ டிஸ்ப்ளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 செயலி, அட்ரினோ 720 ஜிபியு மற்றும் 512ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படுகிறது.

மேலும் படிக்க | சாம்சங் கேலக்ஸி போனுக்கு ரூ 18000 வரை தள்ளுபடி! இதைவிட அதிக சலுகை கிடைக்காது!

விவோவின் புதிய ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் உள்ளது. புகைப்படங்களை கிளிக் செய்வதற்கு, மொபைல் போனில் 50எம்பி மெயின் மற்றும் 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸும், செல்ஃபி எடுக்க 50எம்பி ஆட்டோஃபோகஸ் முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி
Vivo V40 5G போனில், பெரிய அளவிலான 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 80W வேகமான சார்ஜிங் ஆகிறது. இரட்டை 4G VoLTE, 5G, Wi-Fi, GPS, Bluetooth, Glonass, QZSS மற்றும் USB Type-C போர்ட் அகியவை, விவோவின் புதிய போனின் இணைப்பு விவரக்குறிப்புகள் ஆகும்.

இதர விவரங்கள்
புதிய Vivo V40 5G ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் என பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. போனின் எடை 190 கிராம் என்பதும், IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அட்டகாசமான விலையில் சாம்சங் கேலக்ஸி A55 5G ஸ்மார்ட்போன்! நவீன தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News