WhatsApp-ல் இனி Stickers மூலமாகவும் பேசலாம்... எப்படி?

பிரபல அரட்டை செயலியான WhatsApp தங்களது பயனர்களின் உணர்வுகளை மேலும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த ஏதுவாக ஸ்டிக்கர் வசியினை அறிமுகம் செய்யவுள்ளது!

Last Updated : Oct 27, 2018, 08:37 AM IST
WhatsApp-ல் இனி Stickers மூலமாகவும் பேசலாம்... எப்படி? title=

பிரபல அரட்டை செயலியான WhatsApp தங்களது பயனர்களின் உணர்வுகளை மேலும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த ஏதுவாக ஸ்டிக்கர் வசியினை அறிமுகம் செய்யவுள்ளது!

தற்போது WhatsApp-ல் ஸ்மைலிஸ் எனப்படும் குறும்பொம்மைகளை பயனர்கள் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் இந்த ஸ்மைலிகளுடன் கூடுதலாக ஸ்டிக்கர் வசதி அறிமுகம் செய்யப்படும் என WhatsApp தெரிவித்துள்ளது.

இதுகுறித்து WhatsApp தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... பயனர்களின் உணர்வுகளை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த WhatsApp ஸ்டிக்கர் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக WhatsApp வடிவமைப்பாளர் குழு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஸ்டிக்கர்கள் மூன்றாம் நபர் வடிவமைப்பினையும் பயன்படுத்த வழிவகுக்கிறது. 

அதேவேலையில் பயனர்களும் API வசதியினை பயன்படுத்தி தங்களது விருப்ப ஸ்டிக்கர்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதியானது iOS மற்றும் Android இரு இயக்கமைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

Google Play Store-ல் கிடைக்கும் இதர செயலிகளை போலவே இந்த செயலியிலும் பயனர்கள் எளிதாக ஸ்டிக்கர்களை உருவாக்கி வெளியிட இயலும். பின்னர் இந்த ஸ்டிக்கர்களை தங்களது WhatsApp-ல் நேரடியாக பகிர்ந்துக்கொள்ள இயலும்.

WhatsApp அரட்டை செயலியில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த, புதிய ஸ்டிக்கர் பொத்தானைத் அழுத்தவும், பின்னர் பகிர விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுக்கவும். பிளஸ் ஐகானைத் தட்டுவதன் மூலம் புதிய ஸ்டிக்கர் WhatsApp நினைவகத்தில் பதிக்க செய்யலாம்.

ஸ்டிக்கர்கள் வரும் வாரங்களில் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பதிப்பிற்கு கிடைக்கும் எனவும் WhatsApp தெரிவித்துள்ளது!

Trending News