WWDC 2021: கணினியில் ஆப்பிளின் WWDC நேரடி நிகழ்வை பார்ப்பது எப்படி? இப்படி…

உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது மிகப்பெரிய டெவலப்பர்கள் மாநாட்டை 2021 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி நடத்தவிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2021, 02:14 PM IST
  • WWDC 2021: கணினியில் ஆப்பிளின் WWDC நேரடி நிகழ்வை பார்க்கலாம்
  • கலிபோர்னியாவின் குபேர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நாளை மாநாடு நடைபெறும்
  • பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
WWDC 2021: கணினியில் ஆப்பிளின் WWDC நேரடி நிகழ்வை பார்ப்பது எப்படி? இப்படி… title=

உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது மிகப்பெரிய டெவலப்பர்கள் மாநாட்டை 2021 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி நடத்தவிருக்கிறது.

WWDC (Worldwide Developers Conference) 2021 மாநாட்டில், மிகப் பெரிய அறிவிப்புகளை வெளியிடும் என்று பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். அடுத்த OS aka iOS 15, iPadOS 15, macOS 12, அடுத்த தலைமுறை ஆப்பிள் மேக்புக் ப்ரோ (MacBook Pro) மாடல்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் இந்த WWDC 2021 ஆன்லைன் நிகழ்வில் செய்யப்படலாம். 

இந்த டெவலப்பர்கள் மாநாட்டை உங்கள் வீட்டில் இருந்தே நேரலையில் பார்க்க முடியும். அது எப்படித் தெரியுமா?

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் குபேர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவிலிருந்து (Apple Park in Cupertino, California, United States) WWDC 2021 ஆன்லைன் நிகழ்வை ஆப்பிள் நேரலையில் வழங்க திட்டமிட்டிருக்கிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் (Tim Cook) நிகழ்வைத் தொடங்கிவைப்பார். iOS 15, iPadOS 15, macOS 12, new MacBook Pro மாதிரிகள் தொடர்பான பல அறிவிப்புகளைச் செய்வார்.  

WWDC 2021 நடைபெறும் நேரம் இந்தியாவில் ஜூன் ஏழாம் தேதி இரவு 10:30 மணி IST ஆகும். பல்வேறு நாடுகளிலும் நேரம் மாறுபடும்.

Also Read | Google Chrome பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்கிறது; பயனர்கள் be ALERT

WWDC 2021 நேரலையை எப்படி பார்ப்பது?
ஆப்பிளின் WWDC ஆன்லைன் நிகழ்வு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலிலும், ட்விட்டர் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். WWDC 2021 மாநாட்டை சுலபமாக பார்ப்பதற்கு, யூடியூப் சேனல் மிகவும் சரியானதாக இருக்கலாம். 

இந்த ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய மேக்புக் ப்ரோ மாதிரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் அல்லது ஐபோன் 13 தொடரின் வரவிருக்கும் அடுத்த மாடல் தொடர்பான செய்திகளும் அறிவிக்கப்படலாம். புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்த இன்னும் நேரம் உள்ளது. நான்கு மாடல்கள் உட்பட ஐபோன் 13 தொடர் இந்த ஆண்டு செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read | 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் Realme

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News