இனி வீட்டிலேயே தியேட்டர்! 55 இன்ச் டிவி விலையில் 85 இன்ச் ஸ்மார்ட் டிவி - விலை இதுதான்

சீன நிறுவனமான சியோமி, 85-இன்ச் அளவிலான ஸ்க்ரீன் சைஸ் கொண்ட புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் இருக்கும் அம்சங்களின் விவரங்களை பார்க்கலாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 21, 2023, 01:38 PM IST
  • 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு போட்டியா 85 இன்ச் டிவி
  • அதுவும் பட்ஜெட் விலையில் சீனாவில் அறிமுகம்
  • இனி வீட்டுக்குள்ளேயே தியேட்டர் வந்துவிடும்
இனி வீட்டிலேயே தியேட்டர்! 55 இன்ச் டிவி விலையில் 85 இன்ச் ஸ்மார்ட் டிவி - விலை இதுதான் title=

ஸ்மார்ட் டிவி வாங்கும் யோசனையோடு இருப்பவர்களுக்கு, ஒரு சூப்பரான சேதி இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே தியேட்டர் ஃபீலை கொடுக்கும் ஸ்மார்ட் டிவியை 85 இன்சில் சியோமி அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி டிவி ஏ ப்ரோ 85 (Xiaomi TV A Pro 85) 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடன் 85-இன்ச் ஹை-பிரஷ் ஸ்க்ரீனில் வந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் 85-இன்ச் ஸ்கீன் ஒரு 4கே பேனலாகும் (4K Panel). அதாவது இதற்கு முன் வந்த மாடலை விட 10 இன்ச் பெரியதாக உள்ளது. சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி, டிவி ஏ ப்ரோவின் ஸ்க்ரீன் ஆனது கடுமையான மற்றும் சிறந்த கலர் காலிப்ரேஷன் சோதனைக்கு (Color Calibration Test) உட்பட்டுள்ளது.

மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி இஎம்எம்சி மோஷன் காம்பென்ஷேஷனையும் (EMMC motion compensation) வழங்குகிறது, இது கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளுக்கான மென்மையான வீடியோ அவுட்புட்டை (Smooth Video Output) வழங்குகிறது.  இதன் டிஸ்பிளே 3840 x 2160 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்டுள்ளது மற்றும் காம்ப்பெடிட்டிவ் மோட்-ஐ (Competitive mode) ஆக்டிவேட் செய்யும் போது இது அதிகபட்ச 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது. 

மேலும் படிக்க | அமேசானின் புதிய வசதி! இனி EMIல் எளிதாக பொருட்களை வாங்க முடியும்!

சவுண்ட் அவுட்புட்டை பொறுத்தவரை, இது டிடிஎஸ் சவுண்ட் என்கோட்டிங்கிற்கான ஆதரவு (DTS sound encoding) உடன் இரண்டு 10வாட் ஹை-பவர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் (10W high-powered stereo speakers) வருகிறது. 1.07 பில்லியன் கலர்களை ஆதரிக்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவானது குறுகிய பெஸல்களுடன் வருவதால், இதையொரு ஃபுல்-ஸ்க்ரீன் டிசைன் (Full-screen design) என்றே கூறலாம். இந்த புதிய சியோமி டிவி ஏ ப்ரோ 85-இன்ச் மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட லோவர் ஃப்ரேம் சிஸ்டம் (Lower Frame System) உடனான 96.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவை (Sceen- to body ratio) கொண்டுள்ளது.

இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்கள் உள்ளன, இரண்டு யூஎஸ்பி (USB) இன்டர்பேஸ், ஒரு நெட்வொர்க் போர்ட் (Network Port) மற்றும் ஒரு எஸ்/பிடிஐஎஃப் (PDIF) இன்டர்பேஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியில் சிங்கிள் ஏவி இன்டர்பேஸும் (Single AV Interface) உள்ளது. குவாட்-கோர் கோர்டெக்ஸ்-ஏ55 சிபியு (Quad-core Cortex-A55 CPU) உடன் வரும் இந்த ஷாவ்மீ டிவியானது 3ஜிபி ரேம் / 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இந்த மாடல் டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் ஆதரிக்கிறது.

சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.68,000க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சியோமியின் மிகப்பெரிய டிவிக்களாக இரண்டு 65-இன்ச் மாடல்கள் மட்டுமே வாங்க கிடைக்கின்றன. ஒன்று - 2023 எடிஷன் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65-இன்ச் மாடல் ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டாவது - ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்65, இந்த மாடலின் விலை ரூ.55,999 ஆகும். இப்போது அந்த வரிசையில் 85 இன்ச் ஸ்மார்ட் டிவி சேர்ந்திருக்கிறது என்றாலும், எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் இல்லை. 

மேலும் படிக்க | ஜியோவின் இந்த பிளான் தெரியுமா? நெட்பிளிக்ஸ் இலவசம்.. 84 நாள் வேலிடிட்டி..! 392 ரூபாய் மட்டுமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News