எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவ ஜெனரல் எசரித்துள்ளர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தார். பின்னர் ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் நேற்றிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல தடை விதித்து உள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய மக்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்கள் கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்ததடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் ஈரான் சிறையிலிருந்த விடுதலையாகி, தமிழகம் திரும்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடித் தொழிலாளிகளாக துபாய் சென்றனர். 2016 டிசம்பர் 15-ம் தேதி, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் ஈரான் கடற்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, ஈரான் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறினால், கைது மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் தொடரும்' என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமர வீர பேட்டி அளித்துள்ளார்.
ஈரான் பாராளுமன்றத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கொமேனி வழிபாட்டுத்தலத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரவுஹானி வெற்றி பெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக அதிபராவது குறிப்பிடத்தக்கது.
இதில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி மற்றும் இப்ராகிம் ராய்சி ஆகியோர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு இருந்த செய்திகளின்படி 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. சுமார் 4 கோடி பேர் வாக்களித்து இருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.