பேனர் விவகாரம் பா.ஜ.க.வின் தவறான பிரச்சாரமாக இருக்கிறது. தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என ங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி அகமது படேல் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிடாததால் ஒருமனதாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் முதல் கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர் 9ம் தேதியும், 89 தொகுதிகளை கொண்ட இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 14ம் தேதி நடக்க உள்ளது. அந்த வகையில் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்று காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.
வரும் நவம்பர் 9ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ஏழைகளுக்கு வழங்கிய 57,000 கோடி ரூபாய் மானியத்தை தவறாக பயன்படுத்தப்பட்டது. மானியங்கள் என்ற பெயரில் கருவூலத்தைத் திருடுவதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
நீண்டகாலமாக மானிய விலையில் சர்க்கரை வழங்கி வந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. அந்த முடிவை அ.இ.அ.தி.மு.க. அரசு எதிர்க்காத காரணத்தால் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிற சர்க்கரை விலை கிலோ ரூபாய் 25 ஆக தமிழக அரசு
உயர்த்தியிருக்கிறது. இந்த முடிவு தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஓய்வு பெற இமாச்சல் மாநிலத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே அவர் டெல்லி புறப்பட்டு வந்தார். டெல்லி வந்த அவரை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் என பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிவு 120பி பிசி சட்டத்தின் கீழ் முன்னாள் சுற்றுச்சூழல் அமைசர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய ஜனதா தளம் முத்த தலைவர் நிதிஷ் குமார் கட்சிக்கு புறம்பான செயல்கள் செய்தோர் என் 21 நபர்களை இடைக்கால நீக்கம் செய்துள்ளார்.
ஏ.என்.ஐ அறிக்கையின்படி, மாநில தலைவர் வசித்த நாராயணன் இந்த 21 நபர்களையும் கட்சிக்கு புறம்பான செயல்கள் செய்ததாக கூறி இடைக்கால நீக்கம் செய்துள்ளார்.
இப்படியலில் முத்த தலைவர்கள் ரமாய் ராம், அர்ஜுன் ராய், ராஜ்கிஷோர் சின்ஹா ஆகியோரும் அடங்குவர்.
ராஜ்யசபா தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் குஜராத் திரும்பினர்.
அந்த 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விமான நிலையத்தில் அகமது படேல் வரவேற்றார். தேர்தல் நடைபெறும் வரை எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருக்க பாதுகாப்பாக தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.