கேரளாவில் சமிபத்தில் நடைபெற்ற ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது, மூன்று வயது சிறுவனை இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, ஒரு இலை வடிவ பலகையினில் கட்டப்பட்டு ஊர்வளம் கொண்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குர்கிராம் மாவட்டத்தி ரியான் சர்வதேச பள்ளியில் 2-வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள தாகூர் ஃபப்ளிக் பள்ளியில் படிக்கும் 5-வயது பெண்ணை அந்த பள்ளியின் பியூன் விகாஸ் கற்பழித்து உள்ளான்.
வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது.இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி விகாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியை அடுத்து, ஃபருகாபாத் மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள ராம் மனோகர் லோகியா ராஜ்கியா சிகிட்சாலே மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலை வருகைப்பதிவேடு பரிசோதனை செய்யும்போது உள்ளேன் அம்மா என்று பதிலளிக்காத காரணத்திற்காக குழந்தையை இரக்கமின்றி அடித்து உள்ளார் ஆசிரியர்.
இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை பிஆர்டி கல்லூரி மருத்துவமனையில் 1,256 பேர் இறந்துள்ளதாக, பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே. சிங் புதன்கிழமை அன்று கூறியுள்ளார்.
கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 31 (வியாழக்கிழமை) அன்று 16 குழந்தைகள் இறந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 415 குழந்தைகள் மாநில அரசால் இயக்கப்படும் மருத்துவமனையில் இறந்துள்ளனர். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் ஜாம்ஷெட்டில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநிலம் கோரக்பூரைச் தொடர்ந்து ஜாம்ஷெட்பூரிலும் குழந்தைகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது.
கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததை அடுத்து. இன்று (சனிக்கிழமை) டெல்லி தேசிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் இளங்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இது குறித்து குடும்பத்தார் கூறுகையில், அக்குழந்தை திங்களன்று ராவ் துலா ராம் மருத்துவமனையில் பிறந்துள்ளது. திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஆக்ஸிஜனை வழங்க மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளார், ஆனால் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தாய், மகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இங்கிலாந்தின் குளுசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் ஹெய்டன் கிராஸ் என்பவர் பெண்ணாக இருந்த இவர் ஆணாக மாறுவதற்கு விரும்பி அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இதற்கான பிறப்புறுப்பு அறுவை சிகிச்சைக்கு அரசே நிதியுதவி செய்தது. சிகிச்சை முடிந்து, கடந்த 3 ஆண்டுகளாக ஹடென் சட்டப்படி ஆணாக வாழ்ந்து வருகிறார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றாமல் இருந்தார்,
இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலமாக இவர் அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இன்று தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைப்பெற்றது, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படும். முதல் கட்டமாக இன்றும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை வழங்கப்படமாட்டாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அசாமில் வறுமையை ஒழிக்கவும், குழந்தைகள் இறப்பை தடுக்கவும் புதிய மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வோருக்கு இனி அரசு வேலை வழங்கப்படாது.
42,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் நஃபி டியாபி என்ற பெண் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்று கொண்டிருந்தார் ஏழு மாத டியாபி என்ற கர்ப்பிணி பெண்க்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இன்று தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படும். முதல் கட்டமாக இன்றும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக நாளையும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆதித்யா ராஜ் இரண்டு வயது குழந்தை மீது ஆசிட் வீச்சு.
டெல்லியை வசிக்கும் சோனி பிரசாத், ஜம்னா தம்பதியருக்கு ஆதித்யா ராஜ் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி முதல் ஆதித்யா ராஜை காணவில்லை. எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை இதனால் பெற்றோர்கள் துக்கத்தில் இருந்துள்ளனர்,
அப்போது அவர்களது வீ்ட்டருகே பாதி முகம் சிதைந்த நிலையில் வலியில் துடிதுடித்தப்படி ஆதித்யா ராஜ் கண்டுபிடிக்கப்பட்டான். உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேனியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் குழந்தைக்கு "ஜெயலலிதா" என்று சசிகலா பெயர் சூட்டினார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமர வேண்டும் என்று சில தமிழக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவை பச்சிளம் குழந்தைகளையோடு சந்திக்கும் பெற்றோர் மனம் குளிர அவரும் பெயர் சூட்டி மகிழ்வது வழக்கமாக கொண்டிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.