கேரளா மாநில கொச்சி சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து பராகுவே பாஸ்போர்ட்டுடன் 3.693 கிலோ கோகோயின் (போதைப் பொருள்) பறிமுதல் செய்யப்பட்டது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியானது.
மெர்சல் படம் ரூ.200 கோடி வசூலை குவித்ததாக அப்படக்குழுவினருக்கு விஜய் பார்ட்டி வைத்தார். இந்நிலையில் அந்த வகையில் தற்போது கேரளாவில் இந்தப்படம் பெரிய சாதனையை செய்துள்ளது.
மெர்சல் படம் தற்போது வரை கேரளாவில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை எந்தவொரு தமிழ் படமும் கேரளாவில் இந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று கேரளா வட்டாரத்தில் பேச்சு.
கேரளாவில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி, மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுள்ளது.
இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடி காட்சியளிக்கின்றது.
Thiruvananthapuram (Kerala): United Democratic Front called for day-long strike to protest against rising fuel prices pic.twitter.com/vkwHkNmDUX
கேரளா மாநிலத்திற்கு வேலை தேடி வரும் வெளிமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடங்களில் செய்திகள் பரவின. ஆனால் இது வெறும் வதந்தி என்று கேரளா அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதைக்குறித்து இந்த அறிக்கையில் கூறியதாவது:-
கேரளாவில் குடியேறிய வெளிமாநிலத்தவர்கள் யாரும் தக்கப்பட வில்லை. இதில் எந்தவித உண்மையும் இல்லை. இது வெறும் வதந்தி. சில சமூக விரோதிகளால் இது பரப்படுகின்றனர். இந்த போலியான செய்திக்கு மக்கள் யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி முதல் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அட்டப்பாடி, பாலக்காடு, திருவனந்தபுரம், கண்ணனூர், ஆலப்புழை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, கோட்டயம் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.