கேரளா மாநிலத்திற்கு வேலை தேடி வரும் வெளிமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடங்களில் செய்திகள் பரவின. ஆனால் இது வெறும் வதந்தி என்று கேரளா அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதைக்குறித்து இந்த அறிக்கையில் கூறியதாவது:-
கேரளாவில் குடியேறிய வெளிமாநிலத்தவர்கள் யாரும் தக்கப்பட வில்லை. இதில் எந்தவித உண்மையும் இல்லை. இது வெறும் வதந்தி. சில சமூக விரோதிகளால் இது பரப்படுகின்றனர். இந்த போலியான செய்திக்கு மக்கள் யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் அமைதியின்மையை உருவாக்க நோக்கத்தில், இத்தகைய வதந்திகளை பரப்ப சமூக விரோதிகள் முயல்கின்றனர்.
கேரளா சமுதாயம் ஒற்றுமையுடன் வேரூன்றி உள்ளது. நாட்டிலேயே வெளிமாநிலத்தவர்கள் வேலை செய்ய மிகச் சிறந்த மாநிலங்களில் கேரளா ஒன்றாகும். கேரளா அரசு அவர்களுக்கு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. கேரளாவில் குடியேறிய மற்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வெளிமாநிலத்தவர்களை எப்போதும் கேரளாவில் வரவேற்கப்படுகிறார்கள் என்றும்.
சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளன. வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களை கேரள போசார் கண்காணித்து வருகின்றனர். வதந்திகளை பரப்புபவர்கள் அவர்கள் நீதிக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.