கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்றையதினமே விலை இல்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து கடந்த 1-ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளிவைத்தது. அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் இன்று திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. அங்கு பரவலாக பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து உள்ளது. தென்மேற்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் தொடரும். அடுத்த 24மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹூட்டிற்கும் அதிகமாக தினமும் பதிவாகியது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தது.. இதனையடுத்து வெயின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் நாளையுடன் முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹூட்டிற்கும் அதிகமாக தினமும் பதிவாகியது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து வெயின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்:-
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து வரும் மே 30-ம் தேதி அன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக மருந்து வணிகர்கள் சங்கள் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:-
முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஆண்டுதோறும் அரசு மேல்நிலைப்பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது சில நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்படாத பள்ளிகளை ஆய்வுசெய்ய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் காவலர் பணி மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இன்று எழுத்து தேர்வு.
காலியாக உள்ள 13,137, 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கும் 1,015 2-ம் நிலை சிறை காவலர் பணியிடங்களுக்கும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 1,512 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 410 மையங்களில் நடக்கும் இந்த தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்துக்கு ஒரே ஓட்டுக்கு மூன்று முதல் அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். ஜெயலலிதா மறைந்துவிட்டார். அப்புறம் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி வந்துள்ளார்" என்று கிண்டல் கேலியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இடத்தைப் பார்வையிடுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அங்குவந்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:-
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசு, அதன் பாராம் தாங்காமல் தானாகவே கவிழும் என ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:-
தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது. தமிழகத்தில் மர்மமான மரணங்கள் தொடர்கிறது. கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு எடப்பாடி நடவடிக்கை எடுப்பதில்லை.
விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கான வாய்ப்பு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் பயணம் தொடங்கினார். நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மர்ம மரணத்தின் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்பதுதான் இந்த தர்மயுத்தத் தின் நோக்கம். அதற்குத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதிமுக ஒரு குடும்பத்தின் கையில் சிக்கக்கூடாது.
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கிறது. இந்த காலம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும்.
சத்தீஸ்கரில் நக்சல்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் தமிழகம் வந்தன.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்தார் பகுதியில் பர்கபால் - சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இது நக்சல் தீவிரவாதிகள் அதிக்கம் நிறைந்த பகுதியாகும். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்ஸலைட்கள் திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸாரும், அதிரடிப் படையினரும் திடீரென தடியடி நடத்தினர். போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஏடிஎஸ்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெர்வித்து தமிழகத் தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.