டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெர்வித்து தமிழகத் தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 18 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது.
இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று லாரி உரிமையாளர் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் தலைவர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழகத்தில் வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று கோவை, கரூர், வேலூர் உள்பட நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவு:-
கடந்த வருடம் 80 இடங்களில் நடந்த நீட் தேர்வானது, இந்த ஆண்டு மேலும் 23 நகரங்களில் நடக்கும். இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும். ஐஐடி, ஜேஇஇ தேர்வு நடந்த இடங்களில் நீட் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை ஆர்கேநகர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-
ஆர்கேநகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். அவர் முதல் அமைச்சரான பிறகும் அந்த தொகுதிகள் முன்னேற்றம் அடைய வில்லை.
இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் அடித்து தமிழக அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். இதனால் தமிழகம் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று விஜய் ஹசாரே இறுதி ஆட்டம் நடந்தது. இதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியும் மோதின. இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்கியது.
முதலில் பேட்டிங்கை செய்த தமிழகம் அணி 47.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தமிழகம் சார்பாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 112 ரன்கள் எடுத்தார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியும் மோதுகின்றன.
5-வது முறையாக பட்டம் வெல்லும் குறியுடன் தமிழக வீரர்கள் தங்களை தயார்படுத்தியுள்ளனர். அதே சமயம் பெங்கால் அணி ஏற்கனவே 5 முறை இறுதி ஆட்டத்திற்கு வந்து அதில் 4-ல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கு முன்னர் இரு முறை இறுதிச்சுற்றில் தமிழகத்துடன் மோதியுள்ள பெங்கால் அணி, அந்த இரண்டிலுமே தோல்வி கண்டுள்ளது.
சுங்க சாவடி வரி வசூலை எதிர்த்து மார்ச், 30-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடக்க உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த, நான்கு லட்சம் லாரிகள் பங்கேற்கும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரி உயர்வு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கோபாலநாயுடு, பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (08-03-17) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது.
இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை புதன்கிழமை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை புதன்கிழமை (08-03-17) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளை 10ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.
இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக திட்டக்குழு துணைத் தலைவராக திறம்பட பணிபுரிந்த சாந்தா ஷீலா நாயர் அதன் பின்னர் ஐஏஎஸ் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். எனினும், ஷீலா நாயரின் பணித்திறமையை கருத்தில்கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரை தனது அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.
இதன்பின்னர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா சாந்தா ஷீலா நாயரை முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வாடிப்பட்டியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகியதைப் பார்த்து மனவேதனை அடைந்த பல விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும 5-ம் தேதி மாநிலம் தழுவி மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும 5-ம் தேதி மாநிலம் தழுவி மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.