நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு

Last Updated : May 16, 2017, 03:21 PM IST
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு  title=

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில், மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

இது சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்காக காத்திருப்பதாகவும், மத்திய அரசின் முடிவுக்குப் பின்னரே மருத்துவ விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நீட் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார். 

அப்பொழுது அவர் கூறியதாவது:- 

உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News