திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் திபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
மெர்சல் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா இல்லையா என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழகம் குறைக்க வேண்டும்! என்று தனது சமூக வலை தளம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
நடராஜனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க, செய்த அவசர ஏற்பாடுகளை, ஜெயலலிதாவிற்கு, சசிகலாவின் குடும்பம் ஏன் செய்யவில்லை?' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
திரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் எப்படி ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது.
தமிழாகத்தில் கடந்த பத்து வருடங்களாக பெய்து வரும் மழையின் நிலவரங்களை பற்றி அறிவோம்.
எந்தந்த ஆண்டில் எவ்வளவு மழை பெய்துள்ளன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழைப்பொழிவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி காணப்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் 38% குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு தமிழகமெங்கும் மழை பரவலாக பெய்தது.
தமிழகத்தில், விபத்து குறைப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில், வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அனுப்பியுள்ள அறிக்கை:-
அதிகாரிகளின் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்; அப்போது, கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும். வாகன சோதனையின் போது, கையில், 'டார்ச் லைட், வாக்கி டாக்கி' வைத்திருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறி வருகின்றனர். எனினும் மாநிலத்தில் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலுக்கு கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் பலியாகியுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு நடிகர் கமல்ஹாசன் கூறியது, தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன், தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் தேர்தல் வந்தால், அதில் என்னுடைய பங்கு இருக்கும் எனவும், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் என கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அணைகளிலும் குறிப்பிட்ட அளவு நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும், அதேவேளையில் சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் மும்பை மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. சென்னையில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும், இரவு நேரங்களில் சாரலுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக இணைப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல் அமைச்சராக நியானம் செய்தனர். இந்நிலையில் தற்போது இன்று அவருக்கும் மேலும் கூடுதலாக பொறுப்புகள் வழப்பட்டுள்ளது.
http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2017/PR220817.pdf
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு பாதிப்பிலாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்தது. இதனை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம். தமிழக அரசு சார்பில் தேவைப்பட்டால் மேற்பார்வை குழு ஒன்றை அமைத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அதிகம் இருக்கும் வகையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இரவு அல்லது காலை நேரங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, வில்லிவாக்கம், பெரம்பூர், புரசைவாக்கம், நந்தனம், உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதனால் மைலாப்பூர் சிவசாமி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரியில் உள்ள அணை மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வானிலை நிலவரப்படி சென்னையில் வானம் மேகமுட்டதுடன் காணப்படும். இன்று மழை மற்றும் கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தெலங்கானாவில் இருந்து தென் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நீடிப்பதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களுரில் திங்கள் அன்று மாலை 4 மணி நேரத்தில் 14.சி.மி மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து வந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.