மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மும்பையில் இன்று நடைபெறும் சத்ரபதி சிவாஜி சிலை பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி வருகை. அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது. இவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் மொத்தம் 22 தமிழக மீனவர்கள் உள்ளனர்.
ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட குடியரசுதலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இன்று முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகிள்ளது.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க இருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட உள்ளதாம்.
பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார். பணமதிப்பிழப்பால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி, ஒரு சாதாரண குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு இல்லத்தரசி, தாய் மற்றும் வேலை பார்க்கும் பெண். முன்னாள் முதல்வர் செல்வி டாக்டர் ஜெயலலிதாவின் அதிர்ச்சி மரணத்தை நினைத்து கவலைப்படும் கோடானு கோடி நபர்களில் நானும் ஒருத்தி.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பண மதிப்பை குறைத்த மோடியின் இந்த செயல் முட்டாள்தனமான நடவடிக்கை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.