பீட்டா அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளின் மெனுவில் இருந்து அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து உள்ளனர்.
இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்:-
சமீபத்தில் ஜெர்மனி சுற்று சுழல மந்திரி அரசு விழாக்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் அசைவை உணவை பரிமாற தடை விதித்தார். அதுபோல் இந்திய பிரதமர் மோடி தடை விதிக்க வழை வகுக்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது.
புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:- அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல் அமைச்சர்களின் கூட்டு முயற்சிகளாலேயே புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வை புலப்படும்.
ஜிஎஸ்டி-க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம்பெறும்.
ஒரே தேசம், ஒரே நோக்கம், ஒரே தீர்மானம் என்ற உணர்வை ஜி.எஸ்.டி. பிரதிபலிக்கிறது. அதுபற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட உலக தலைவராக உள்ளார். சுமார் 6.9 மில்லியன் ஃபாலோவர்களுடன் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மிஞ்சி முன்னிலை பெற்றுள்ளார்.
தற்போது வரை இன்ஸ்டாகிராமில் 101 போஸ்ட்களை நரேந்திர மோடி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உலக தலைவர்கள் என்ற சர்வதேச ஆய்வில் அரசு பணியாளர்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் 325 இன்ஸ்டாகிராம் கணக்குகளின் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
கோர்ட்டில் ஆஜராகாத டெல்லி முதல்வரான மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய கெஜ்ரிவால், நரேந்திர மோடி 12-ம் வகுப்பு வரை தான் படித்திருந்ததாகவும், அவர் வெளியிட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியானவை என டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து கெஜ்ரிவால் மீது பாஜக-வை சேர்ந்த கர்பி அங்லோங் என்பவர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.
காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும்.
இந்த சுரங்கப்பாதையால் வாகன ஓட்டிகளுக்கு 2 மணி நேரம் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.99 கோடி மதிப்பிலான எரிபொருளும் சேமிக்கப்படும். ரூ.3,700 கோடி செலவில், பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
PM Modi dedicates the Chenani - Nashri Tunnel in Jammu & Kashmir to the nation. Watch. https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) April 2, 2017
காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.
Prime Minister, Shri @narendramodi to inaugurate the longest highway tunnel of India at #ChenaniNashri on 2nd April, 2017. pic.twitter.com/gHhsvSG4wo
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாமல் அவை நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றகூட்டம் நடைபெறும் போது இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். பங்கேற்காத எம்.பி.,க்கள் வராததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சரக்கு-சேவை வரி மசோதா-2017 (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அடுத்த நிதி ஆண்டுக்குள் ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் 1 லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என்று மத்திய மந்திரி முக்தார் கூறியுள்ளார்.
கடந்த 24-ம் தேதி கோவையில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். குறித்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு ஆதியோகி படம் இடம்பெற்ற சால்வை ஒன்றினை ஜக்கி வாசுதேவ் அவருக்கு அளித்திருந்தார்.
விழா முழுவதும் பிரதமர் மோடி அந்த சால்வையை அணிந்திருந்தார். அந்த சால்வையை தனக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், டிவிட்டர் மூலம் டெல்லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி என்ற ஆதரவாளர் ஒருவர் கேட்டிருந்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஷரன்பூர், பிஜ்னோர், பரேலி, பிலிபிட், லகிம்புர் கெரி ஆகிய முக்கிய தொகுதிகள் இதில் அடக்கம்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் முறையாக தேசிய பாதுகாப்புப் படையின் கறுப்பு பூனை வீரர்கள், தேஜாஸ் போர் விமானங்கள், தனுஷ் பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றன.
டெல்லியில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் டெல்லி ராஜபாதைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்றனர். விழா மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.