68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
அபுதாபி இளவரசரும், ஆயுதப் படையின் துணைத் தலைமை தளபதியுமான ஷேக் முகம்மது ஜாயேத் அல் நல்யான் மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
டெல்லி சென்ற முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
சென்னையில் 'துக்ளக் இதழ்'' 47-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துக்ளக் ஆண்டு விழாவில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சூரிய கடவுளுக்கு நன்றி சொல்லும் விழாவே பொங்கல். இயற்கையோடு ஒன்றிணைந்த கலாச்சாரமே நமது நாட்டிற்கே வலுசேர்க்கிறது.
மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பார்லிமென்ட் குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஆற்றல் மிக்க குஜராத் என்ற சர்வதேச கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் பயணமாக நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:
டிசம்பர் 30-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.