லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக டவர் நகரில் 18 வயதான இளைஞர் ஒருவர் கென்ட் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பயங்கரவாத அச்சுறுத்தல் பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் நீல் பாசு கூறுகையில் "இன்று காலை முதல் எங்கள் விசாரணையில் சந்தேகத்திற்கு ஆளான மேலும் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
லண்டன் சுரங்க ரயில் பாதையில் பக்கெட் குண்டு வெடித்ததில், 29 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
லண்டனில் சுரங்க பாதையில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்தால், ரயில் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி உள்ளனர். மேலும் பலருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது என லண்டன் மெட்ரோ செய்தித்தாள் கூறியுள்ளது.
தற்போது அங்கு மீட்பு பணியும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
இங்கிலாந்தின் குளுசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் ஹெய்டன் கிராஸ் என்பவர் பெண்ணாக இருந்த இவர் ஆணாக மாறுவதற்கு விரும்பி அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இதற்கான பிறப்புறுப்பு அறுவை சிகிச்சைக்கு அரசே நிதியுதவி செய்தது. சிகிச்சை முடிந்து, கடந்த 3 ஆண்டுகளாக ஹடென் சட்டப்படி ஆணாக வாழ்ந்து வருகிறார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றாமல் இருந்தார்,
இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலமாக இவர் அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
லண்டன் நகரில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அதிவேகமாக பரவி வருகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தீயணைப்பு படைகள் விரைந்தனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்கெட்டில் உள்ள மூன்று மாடிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.
நீண்ட நேரம் இந்த தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் கட்டடம் வெடித்துவிடும் என்றுமக்கள் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டியில் முதல் அரையிறுதி சுற்று கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்திய இங்கிலாந்தும், பாகிஸ்தானும் நேற்று மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 211 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி விக்கெட்:-
ஹசன் அலி- 3
ஜுனைத் கான்- 2
ரயீஸ் - 2
விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.
லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.
இதில் 27 மாடி கட்டிடத்தில் 2-வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது. தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள், 200 வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்து வருபவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
மேலும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் நேற்றுடன் நிறைவடைகிறது. கார்டிப்பில் நேற்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதின.
இந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது.
237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கியது பாகிஸ்தான் அணி.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
கார்டிப்பில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், நேற்று மோதியது. தென் ஆப்ரிக்க அணியுடனான பி பிரிவு லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துசியது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் இரு அணிகளும் களமிறங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், இன்று பலப்பரீட்சை.
இந்த லீக் போட்டி ஓவல் மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கியது.
இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது.
டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் கோஹ்லி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 ஏ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது.
இந்நிலையில் லண்டன் தாக்குதலை தொடர்ந்து ஓட்டல் ஒன்றில் மக்கள் பீதியடைந்து இருக்கைகளுக்கு கீழே அமரும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள பப்கள் மற்றும் ஓட்டல்களில் பெரிய திரையில் திரையிடப்பட்ட, சாம்பியன் லீக் கால்பந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.