சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
'பைரவா' வெளியான 4 நாட்களில், 100 கோடி வசூலைத் தாண்டியதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாகியது. இப்படம்ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது இப்படம். படத்தின் முதல் நாள் வசூல் 16.61 கோடி என ஸ்ரீக்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
பைரவா படம் ரிலீஸான அன்று கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த 12-ம் தேதி 55 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. தளபதி ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைரவா ரிலீஸான அன்று மட்டும் ரூ.10.4 லட்சம் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. பைரவா ஏரீஸ்பிளக்ஸ் தியேட்டரில் மலையாளம் அல்லாத பிற மொழி படம் ஒன்று ரிலீஸான அன்று ரூ. 10.4 லட்சம் வசூலித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இரு தனியார் வங்கியிடம் லோன் வாங்கிட்டு ராவடி செய்யும் ரவுடிகளிடம் வசூல் செய்வதில் கில்லியான பேங்க் கலெக்ஷன் ஏஜெண்ட் விஜய்.
விஜயின் வங்கி அதிகாரி ஒய். ஜி. மகேந்திரன் வீட்டு திருமண நிகழ்வு ஒன்றில் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல் கொள்கிறார். கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை சொல்வதற்காக முயற்சிக்கும் விஜய், கீர்த்தி சுரேஷை சுற்றி இருக்கும் ஆபத்தையும், அதன் பின்னணி மற்றும் அதற்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார்.
விஜய்யின் பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000-க்கும் மேலான அரங்குகளில் வெளியாகியுள்ளது.
இன்று காலை 5 மணிக்கு சென்னையில் இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி நடந்தது.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா ரிலீசாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 5 மணிக்கு இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் இந்தப் படத்தை பார்த்து ரசித்தனர்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள பைரவா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலவர் வெளியான சிறிது நேரத்திலேயே டிரைலரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக் கொண்டே போனது. தளபதி ரசிகர்களும் பட வெளியீட்டை விமர்சையாக கொண்டாட திட்டம் போட்டு வருகின்றனர். படமும் பல வகையில் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
டிரெய்லர் பார்க்க:-
விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்து ஹிட்டான படம் தெறி. இதைத்தொடர்ந்து விஜய்யின் 61-வது படத்தில் மீண்டும் இந்த இருவரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இயக்குநர் அட்லி இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் விஜய்யின் 61-வது படத்தை உறுதி செய்துள்ள அவர், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜயின் 6௦-வது படமான "பைரவா" படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இந்த பட்டதின் டீசர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ளது. தற்போது "பைரவா படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் 'தேவி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, சோனு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவி'. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கி இருக்கிறார். பிரபுதேவா தயாரித்திருக்கும் இப்படத்தை ஆரோ சினிமாஸ் வெளியிட்டு இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பிரபுதேவா, தமன்னா, எமி ஜாக்சன், சோனுசூட், பாராகான் நடித்து வரும் படம் ‘தேவி’. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளிவருகிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
டிரைலர்:-
ரியோவில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுவதாக இருந்தனர். ஆனால் நேற்றே படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக் ஆனதால் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் "பைரவா" என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தற்போது விஜயின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிவிட்டர்:-
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த நடிகை அமலாபால் நடித்த தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை பிரபல பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய் இயக்கினார். இந்த படங்களை இயக்கியபோது, அமலாப்பாலுக்கும், விஜய்க்கும் காதல் ஏற்பட்டது.
இருவீட்டாரின் சம்மதத்து டன் கடந்த 2014-ம் ஆண்டு கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் அதே ஆண்டு, ஜூன் 12-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.