ஜல்லிக்கட்டு ஆதரவாக மெரினாவில் இளைய தளபதி விஜய்!!

Last Updated : Jan 21, 2017, 10:36 AM IST
ஜல்லிக்கட்டு ஆதரவாக மெரினாவில் இளைய தளபதி விஜய்!! title=

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். நேற்று உண்ணாவிரதம் போராட்டமும் நடைபெற்றது. அதேசமயம், இளைஞர்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் அரசியல், சினிமா சாயம் இருக்கக் கூடாது என்பது இளைஞர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில், தனது முகத்தை மூடிக் கொண்டு போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார் தனது ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவித்தார்.

Trending News