அண்ணா சீரியல்: சண்முகத்தை வெளியே கொண்டு வர சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்கும் பரணி

Zee Tamil Anna Serial Today's Episode Update:  சண்முகத்தை வெளியே கொண்டு வர வசமாக சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்க தயாரான பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2024, 12:54 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்
  • சண்முகத்தை வெளியே கொண்டு வர வசமாக சிக்கிய ஆதாரம்.
அண்ணா சீரியல்:  சண்முகத்தை வெளியே கொண்டு வர சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்கும் பரணி title=

Zee Tamil Anna Serial Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியிடம் இன்னும் 1 மணி நேரத்தில் உன் காக்கி சட்டையை கழட்டி உட்கார வைக்கிறேன் என்று சவால் விட்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணி சவால் விட்டதை தொடர்ந்து முத்துப்பாண்டி உன்னால முடிந்ததை பார்த்துக்கோ டி என்று சொல்ல பரணி நடக்க போறதை பார்க்க தான டா போற என்று அங்கிருந்து வெளியே வருகிறாள். 

இதனையடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு சென்று என் புருஷன் தேர்தல்ல நிற்க கூடாதுனு நீயும் பாண்டியம்மாவும் செய்த வேலையாக தான் இருக்கு என்பது எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் 1 மணி நேரத்தில் என் புருஷனை வெளியே கொண்டு வரேன், உன் புள்ளையை காக்கி சட்டையை கழட்ட வைத்து உட்கார வைக்கிறேன், என் புருஷனை தேர்தலில் நிற்க வைத்து உன்னை தோற்கடித்து உன் திருட்டு வேலையை எல்லாத்தையும் வெளியே கொண்டு வரேன் என்று சவால் விடுகிறாள். 

மேலும் படிக்க | அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்து

அதன் பிறகு நேராக தண்ணீர் டேக் அருகே வந்து ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று தேடி பார்க்க எதுவும் கிடைக்காத நிலையில் திடீரென அவளது கண்ணில் சிசிடிவி கேமரா தொன்று தென்படுகிறது, இதனால் பரணி சந்தோஷமடைகிறாள், உடன் இருந்த சிவபாலனிடம் உன் மாமாவை வெளியே கொண்டு வர ஆதாரம் கிடைத்து விட்டது என்று சொல்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக் பாஸ் 8 அப்டேட்.. இந்த தேதியில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News