1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’ முதல் பாகம்,
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா போன்றோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான ‘பாகுபலி’ இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த ‘பாகுபலி’ திரைபபடத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்டமாக வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம், நடிகர் பிரபாஸ் உட்பட அப்படத்தின் நடிகர்கள் உலகளவில் பிரபலமடைந்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி 'பாகுபலி' படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட பிரபாஸ் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக முழு ஈடுபாட்டுடன் தனது சிறந்த
நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாகுபலி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நகரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை, சண்டீகர் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு சோதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி பட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.