பிரபாஸ்-ன் பிரந்தநாளையொட்டி இன்று ’சாஹூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளிலும் ரூ. 150 கோடி செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'சாஹூ'. இயக்குனர் சுஜீத் இயக்கும் இப்படத்தினை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எஸ்.எஸ். ராஜமுௗலியின் கனவு படமான பாகுபலி-யில் வேண்டுமானால் பாகுபலியும், பல்லதேவனும் எதிரியாக இருக்கலாம். நிஜவாழ்வில் இருவரும் எப்படி?
நிஜ வாழ்க்கையில் பல்லதேவனான ராணா தாகுபதி மற்றும் பாகுபலியாக வாழ்ந்த பிரபாஸும் சிறந்த நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் இவ்விருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தினை பெற்றுள்ளது.
நீங்களும் கண்டு ரசியுங்கள்:
பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குனராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் "விவேகம்" படத்தின் காட்சிகள் எஸ்.எஸ். ராஜமௌலியின் மெகா-பிளாக்பஸ்டர் "பாகுபலி" காட்சிகளுக்கு இணையாக வந்துள்ளதாக திரைப்பட தொகுப்பாளர் அந்தோணி எல் ரூபன் கூறியுள்ளார்.
அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விவேகம். இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உலக வர்க்க முடிவுகளை வழங்கியதாக ரூபன் கூறினார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹூ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து
வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குனராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை
பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹூ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவையே கலக்கிய தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி'. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் சாதனை படைத்த ஓடம் இதுவாகும்.
இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை 10-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.
`பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க டூரில் இருந்த பிரபாஸ் தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில் விமானத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ள அவரது இந்த புதிய புகைப்படத் தோற்றம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த தோற்றத்தில் பிரபாஸ் கிளீன் ஷேவ் லுக்கில் உள்ளார். இந்த லுக் ஒரு வேளை புதிய திரைப்படமான சாஹூவிற்கான தோற்றமாக இருக்கலாம். அல்லது பாகுபலியில் நீண்ட தலைமுடி, தாடியுடன் நடித்த அலுப்பில் இம்மாதிரியான கிளீன் ஷேவ் தோற்றத்துக்கு அவர் மாறி இருக்கலாம்.
புகைப்படங்கள் பார்க்க:-
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.
இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், உலகில் உள்ள எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் சாதனை புரிந்து வரும் பாகுபலி 2 திரைப்படம். மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது.
உலகம் முழுவதும் வெளியாகி பாகுபலி 2 ரூ. 1௦00 கோடி ருபாய் வசூல் என்ற சாதனை மைல் கல்லை எட்டியதோடு, ரூ. 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
இந்நிலையில் பாகுபலி 2 இன்று ரூ. 1500 கோடி வசூல் சாதனையை படைக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 940 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபால் போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் ஈட்டிவருகிறது. பாகிஸ்தானில் இதுவரை ரூ 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் உள்ள மூன்று ஜோடி புலிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு ஏழு புலிக்குட்டிகள் பிறந்தன.
இந்த குட்டிகளுக்கு பெயர் வைக்க ஒரு ஆலோசனை பெட்டி செய்யப்பட்டது அதில் சுமார் 400 பெயர்களை பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் பாகுபலியின் பெயரை வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே அளவு தேவசேனாவின் பெயருக்கும் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு கதை கிடைத்தால், அவரை வைத்து படம் இயக்குவேன் என்று பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்தைப் பாராட்டி ரஜினி டுவீட் செய்து இருந்தார். பதிலுக்கு ராஜமவுலி, ரஜினி வாழ்த்தியதை, கடவுளே வந்து வாழ்த்தியது போல் உணர்வதாக கூறி, நன்றியும் தெரிவித்து டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு ராஜமெளலி அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.