வைரமுத்துவுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசவும் தெரியும், கற்களை வீசவும் தெரியும் என்ற ஜீயர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேருந்து பயணக் கட்டண உயர்வை எதிர்த்து ஜனவரி 27-ஆம் தேதி தி.மு.க. நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பங்கேற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
வரும் ஏப்ரல் மாதம் முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் பயணிகள் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்துவது கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவின் மூலம் தமிழக அரசுக்கு சுமார் ரூ.450 கோடி வருவாய் வந்துள்ளதாக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று முதல் வரும் 17 வரை சென்னையில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அண்ணாநகர், தாம்பரம், பூவிருந்தவல்லி, சைதாப்பேட்டை, கோயேம்பேடு ஆகிய இடங்களுக்கு மக்கள் எளிதில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு:-
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
நாள் ஒன்றுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம் சானிட்டோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,275 பஸ்களும் இயக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.