கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்!

கணவரின் உயிருக்கு ஆபத்து.மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி. இந்த வழக்கில் முழுமையாக என்ன நடந்தது? இங்கு பார்ப்போம்!

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jun 24, 2024, 08:19 PM IST
  • கணவருக்காக நரபலிக்கு ஒப்புக்கொண்ட பெண்
  • பல லட்சம் மோசடி
  • நடந்தது என்ன?
கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்! title=

கணவரின் உயிருக்கு ஆபத்து.மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி.சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்க பட்ட பெண் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்தவர் கிளாடிஸ் அனுஷா. இவர் இனையம் புத்தன் துறை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

கிளாடிஸ் அனுஷா தினசரி மருத்துவமனைக்கு வேலைக்காக அரசு பேருந்தில் கடந்த 5 ஆண்டுகளாக சென்று வருகிறார்.பேருந்தில் பயணம் செய்யும் போது கருங்கல் பாலூரை சேர்ந்த சீதா என்பவருடன் அறிமுகம் ஆகி உள்ளார். சீதா சத்துணவு கூட்டத்தில் வேலை பார்ப்பதாக கூறி இவருடன் பழகி வந்துள்ளார்.இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சில நாட்களாக கவலையுடன் சென்றுள்ளார்.அப்போது சீதா உனக்கு ஏற்கனவே இருந்த முன்னாள் காதலன் மாந்திரீகம் செய்து வைத்துள்ளார்.

மேலும் படிக்க | சந்திரகிரகண நரபலி: ஹைதராபாத்தில் கொத்து கொத்தாக மண்டை ஓடுகள்!

எனவே எனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் கூறி உயிர் பலிகள் கொடுத்து உன்னை காப்பாற்றுகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 3.45 லட்ச ரூபாயை சீதா வாங்கியுள்ளார்.மேலும் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அதற்க்கு மீண்டும் நரபலி கொடுக்க வேண்டும் என கூறி சீதா கிளாடிஸ் அனுஷாவிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.ஆனால் கிளாடிஸ் அனுஷா இனிமேல் பணம் இல்லை என கூறியதுடன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.மேலும் சீதா அங்கன்வாடியில் பணிபுரியவில்லை என்பதும் கிளாடிஸ் அனுஷாவிற்கு தெரிவு வந்தது.

இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷா இன்று நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.தன்னிடம் ஆசை வார்த்தை கூறி பண  மோசடியில்  ஈடுபட்ட சீதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதங்கோடு பகுதியை சேர்ந்த சசி என்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News