அக்டோபர் 15 முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள்!!

Last Updated : Sep 26, 2017, 02:12 PM IST
அக்டோபர் 15 முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள்!! title=

வரும் அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு:-

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 

நாள் ஒன்றுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம் சானிட்டோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,275 பஸ்களும் இயக்கப்படும். 

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Trending News