மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கியிருக்கும் நிலையில் சென்னை மெரீனா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் சூழலில் எந்தெந்த மாவட்டங்களில் மழை மற்றும் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Cyclone Michaung Alert in Tamil Nadu: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை. சென்னை உட்பட பல மாவட்டங்களில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மக்களே கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.
Cyclone Michaung Health Alert: வங்க கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயலை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் 200 மிமீ மழை கொட்டக்கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான், அதிக காற்று இல்லாமல் மழை கொட்டும் என தெரிவித்திருக்கிறார்.
மிக்ஜாம் புயல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த இருக்கும் நிலையில், அதன் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.