Crime News In Tamil: உத்தர பிரதேசம் தலைநகர் லக்னோவில் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், அவரது தாயார் மற்றும் 4 சகோதரிகளை ஹோட்டலில் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்தது மட்டுமின்றி ஏன் அவர்களை கொலை செய்தேன் என்பதையும் அர்ஷத் ஒரு வீடியோவாக வெளியிட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது சகோதரிகள் விற்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களை கொலை செய்தேன் என்றும் அர்ஷத் என்ற அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சில நில மாஃபியாக்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் சேர்ந்து ஆக்ராவில் உள்ள தங்களின் வீட்டை கைப்பற்றியிருக்கின்றனர் என்றும் தங்களின் சகோதரிகளை ஹைதராபாத்திற்கு கடத்த முயற்சித்ததாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அர்ஷத் கொலை செய்ததாக அதில் கூறியுள்ளார். தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சகோதரிகள் கடத்தப்படுவதை பார்க்கும் தைரியம் தங்களுக்கு இல்லை என்றும் அதில் அர்ஷத் பேசியுள்ளார்.
5 பேர் கொலையும்... வெளியிட்ட வீடியோவும்...
அந்த வீடியோவில் அர்ஷத் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தனது தாயாரையும், மூன்று சகோதரிகளையும் கொலை செய்துவிட்டதாகவும், நான்காவது சகோதரி ஒருவர் உயிருக்குப் போராடி கொண்டிருக்கிறார் என்றும் அவர் பேசியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அவர்களின் உடல்களையும் அவர் காட்டியிருக்கிறார்.
அவர்களின் உணவில் அர்ஷத் விஷம் வைத்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலரை அவர் கழுத்தை நெறித்து மூச்சு திணறவைத்து, கை மணிக்கட்டுகளை வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அர்ஷத் கொலை செய்வதற்கு அவரின் தந்தையும் உதவியுள்ளார். அஸ்மா என்ற அவரது தாயார், சகோதரிகள் அலியா (9), அல்ஷியா (19), அக்ஸா (16), ரஹ்மீன் (18) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
15 நாள்கள் குளிரில் வாடினோம்
அர்ஷத் சம்பவ இடத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அர்ஷத் கொலை செய்துவிட்டு அவரது தந்தையை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்துள்ளார். தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். அர்ஷத் அந்த வீடியோவில் பேசியதாவது, "அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தொல்லையால் எங்கள் குடும்பம் இந்த முடிவுக்கு வந்தது. நான் என் தாயையும் சகோதரிகளையும் கொன்றுவிட்டேன். இந்த வீடியோவைப் போலீசார் பார்க்கும்போது, இந்த ஊர்க்காரர்கள்தான் இதற்கு பொறுப்பு என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
எங்கள் வீட்டை எங்களிடம் பறித்து கடுமையாக துன்புறுத்தினார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்து போராடினோம். ஆனால் யாரும் அவர்களை தட்டிக் கேட்கவில்லை. 15 நாள்களாக குளிரில் அலைந்து நடைபாதையில் தூங்கினோம். குழந்தைகள் குளிரில் அலைவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் வீட்டை அவர்கள் பறித்துவிட்டார்கள். ஆனாலும் ஆவணங்கள் எங்களிடமே உள்ளன" என பேசியுள்ளார்.
யோகி ஆதித்யநாத்திற்கு கோரிக்கை
மேலும் நாங்கள் மதம் மாறிவிட்டு, இந்த சொத்துக்களை எல்லாம் கோயிலுக்கு தானம் அளித்துவிடலாம் என்று கூட யோசித்தோம் என்றும் அவர் அதில் பேசியிருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம் என சிலரின் பெயர்களையும் அர்ஷத் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது போலீசார் அர்ஷத்தை மட்டும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார முதல்வர்கள்! முக ஸ்டாலின் எத்தனையாவது இடம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ