7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு DA, HRA, TA சேர்த்து ரூ .2 லட்சம் வரை சம்பளம்

யுபிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.upsc.gov.in இல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி 20 ஜனவரி 2021 எனத் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2021, 09:56 PM IST
7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு DA, HRA, TA சேர்த்து ரூ .2 லட்சம் வரை சம்பளம் title=

UPSC-Assistant Professor Recruitment 2021: அரசு வேலைக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் Specialist Grade-III பதவிக்கு உதவி பேராசிரியர் (தோல் நோய், வெனிரியாலஜி மற்றும் தொழுநோய்) தேவை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதவியில் சேரும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 7 வது ஊதியக்குழு (7th Pay Commission) அல்லது 7 வது சிபிசி (7th CPC Salary) அடிப்படையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களின் சம்பளம் நிலை -11 இன் கீழ் (Central Government Matrix), 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பிற கொடுப்பனவு உட்பட, அவர்களின் ஊதிய அளவு 67,700 முதல் 2,08,700 வரையிலும் இருக்கும்.

யுபிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.upsc.gov.in இல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு தரம் -3 உதவி பேராசிரியர் பதவிக்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6. ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி 20 ஜனவரி 2021 வரை. இந்த பதிவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பத்தாரர்கள் மாத சம்பளம் 2.08 லட்சம் வரை எதிர்பார்க்கலாம். அதனுடன் மற்ற கொடுப்பனவுகளான அகவிலைப்படி உயர்வு ( (Dearness Allowance), பயண கொடுப்பனவு (Travel Allowance), வீட்டு வாடகை கொடுப்பனவு (Housing Rent Allowance) போன்றவையும் கிடைக்கும்.

ALSO READ |  7th Pay Commission Latest News: சிறப்பான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு!

யுபிஎஸ்சி (Union Public Service Commission) அறிவிப்பின்படி, தேர்வுக்குப் பிறகு, பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு குருப் A மத்திய சுகாதார சேவை கல்வி சிறப்பு துணை கேடர் வழங்கப்படும். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை ஆறு, அதில் மூன்று இடங்கள்  Unreserved Category விண்ணப்பதாரர்களுக்கும், பிற இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) விண்ணப்பதாரர்களுக்கும், ஒரு இடம் பட்டியல் வகுப்பினருக்கும் (Scheduled Castes) ஒதுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு வேலைகள் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைத்தளமான upconline.nic.in இல் சென்று தெரிந்துக்கொள்ளலாம். 

அதே நேரத்தில், பொது அல்லது யுஆர் வகை விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள், ஓபிசிக்கு மூன்று ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. அதாவது ஓபிசி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 43, ​​எஸ்சி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் ஆகும். 

கல்வி, அனுபவம் மற்றும் பிற தகுதிகள் தொடர்பான தகவல்களுக்கு, யு.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளுங்கள்

ALSO READ |  7th Pay Commission: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள், DA-வுக்காக ஜூலை வரை காத்திருக்க வேண்டாம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News