Healthy Food Idli: ஒருவர் லட்ச கணக்கான ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார் என்றால், அது அதிர்ச்சியாக இருக்காதா? ஹைதராபாத்தைச் சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் இட்லிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்
இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி.
எந்த உணவாக இருந்தாலும் சரி, இட்லியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த உணவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு இட்லியும் சாம்பார், சட்னியும் இல்லாவிட்டால் அன்றைய நாள் பெரிய சோக நாள்தான்.