கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் (JDS) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமி முதலமைச்சராக கடந்த மே மாதம் 23 ஆம் தேதி பதவியேற்றார்.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சுமார் ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சென்னையில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக
‘அம்மா உணவகம்’ துவங்கப்பட்டன. இந்த திட்டத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து.
இந்நிலையில், இன்று கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கூறியதாவது:-
சிற்றுண்டிகள் ரூ.5 க்கும், சாப்பாடு ரூ.10 க்கும் விற்பனை செய்யப்படும். 100 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் மட்டும் நம்ம கேண்டீன் 198 உணவகங்கள் திறக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.