'நீட்' தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல தகனம் செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.