அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29
— ANI (@ANI) September 2, 2017
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12 ஆம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்த நேற்று தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணத்திற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் தான் எனவும், அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் அவரது ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.