இந்திய கிரிக்கெட் அணியில் சகோதர்கர்களாய் களமிரங்கி, ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் பதான் ப்ரதர்ஸ். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள் என அவரது தந்தையே அவர்களுக்கு சான்றிதழ் கெடுத்துள்ளார்.
இந்நிலையில் ராஞ்சி டிராபி போட்டியில் நடைப்பெற்ற சம்பவம் ஒன்று அவர்களது பாசத்தினை மீண்டும் நிறுப்த்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இருவேரு சம்பவங்களில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் இடிதாக்கி உயிர் இழத்துள்ளனர்.
இதுகுறித்து கல்கிபூர் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரத்னேஷ் யாதவ் கூறுகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது இடி தாக்கி இவர்கள் இரந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், கசினாரியா கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்னடிருந்த பஸந்தி ஜாதவ் (45), சிமந்த்ரா ஜாதவ் (38) ஆகியோரும் டோலாஸ் கிராமத்தில் ஜலமிங் டங்கி(50) ஆகிய மூவரும் மின்னல் தாக்கி இறந்ததாக தெரிகிறது.
மத்திய பிரதேசத்தின் அசோக்நாகர் நகரில் அமைத்துள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அந்த மாணவர்கள் தோப்புக்கரணம் போடுகிறார்கள. குனிந்து இரு காலுகளுக்கு இடையில் கை விட்டு காதுகளை பிடித்தவாரு குனிந்த நிலையில் செல்கிறார்கள். அப்பொழுது அங்கு இருக்கும் ஒரு நபர், மாணவர்களின் பின்புறத்தில் தடியால் அடித்த படி செல்கிறார். சில மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுகின்றனர்.
வீடியோ:
ப்ளூவேல் விளையாட்டின் அடுத்த பிடியில் மத்தியப் பிரதேச மாநில மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தமோ என்னும் இடத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவரின் பெயர் சாத்விக் பாண்டே எனவும், அவர் சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என முன்னதாக அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பீகாருக்கு 5 கோடியும் அசாம் மாநிலத்திற்கு 2 கோடி ரூபாயை மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பீகார் மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உடற்பயிற்சிகூடம் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
உடற்பயிற்சியின் போது தனது நடத்தை பற்றி புகார் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், புகார் செய்த பெண்ணை பலமாக தாக்கினர். இந்த நிகழ்வின் முழு பதிப்பானது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மத்தியப் பிரதேசம் போபால் சிறையில் சிர்வர்களின் நெற்றியில் முத்திரை குத்திய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தையை காண தங்கள் தாயாருடன் சென்ற சிறுவர்களின் நேற்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிறைக் கைதி குழந்தைகளிடமிருந்து வேறுபடுத்த இவ்வாறு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம்குறித்து இந்தியாவின் சிறைச்சாலை டைரக்டர் ஜெனரலிடம், மத்தியப்பிரதேச மனித உரிமைகள் ஆணையம், அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கூறியுள்ளது.
மத்திய பிரதேசம் மான்ட்சாரில் 6 விவசாயிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தைப் பார்வையிட போலீசார் தடையை மீறி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மோட்டார் சைக்கிளில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கான மான்ட்சார் என்ற இடத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் பலியாகினர்.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாகவே 5 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே தண்டவாளத்தில் இறந்து படி கிடந்த தாயிடம் ஒன்றரை வயது குழந்தை பால் குடிக்க முயற்சித்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபால் அருகேயுள்ள தாமோ என்ற நகரில் ரயில் தண்டவாளம் அருகே பெண் ஒருவர் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவர் அருகில் இருந்த அவரது ஒன்றரை வயது குழந்தை பிஸ்கட்டை கொறித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் தனது தாய் இறந்தது தெரியாத அக்குழுந்தை, அழுதவாறே தாயாரை எழுப்ப முயற்சி செய்ததுடன், அவரிடம் பால் குடிக்கவும் முயற்சி செய்தது. இதனை அங்கிருந்த சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டடனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் நடவடிக்யாக தூக்குத் தண்டனை அளிக்கக்கூடிய சட்டம் இயற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச போலீஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:-
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு சிறைதண்டனை வழங்குவதற்கு பதில் மரண தண்டனை வழங்கும் மசோதா, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
போபாலில் 8 பேர் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலமான போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிச்சென்ற 8 பேர் கடந்த 31-ம் தேதி போலீஸ் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பணியில் இருந்த காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிச் சென்றனர். 8 தீவிரவாதிகளும் போபால் புறநகர் பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.
போபால் மத்திய சிறைச்சாலையில் போலீசாரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சிமி இயக்க 8 பயங்கரவாதிகள் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையொட்டி திக்விஜய் சிங் இஸ்லாமியர்கள் மட்டும் சிறையை உடைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 30 அடி முதல் 35 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் எல்லை பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அருகிலேயே மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு குழந்தையை மீட்டனர். குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.