மான்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றினால் காஞ்சிபுரம் காமராஜ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் ராட்சத பேனர் சாய்ந்தது. ராட்சத ஜேசிபி பழுத் தூக்கும் இயந்திரம் மூலம் பேனரை நிலை நிறுத்தி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Cyclone Mandous Live: அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் “மாண்டஸ்” புயல் சின்னம் காரணமாக - கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்.
Mandous Cyclone Alert: மாண்டஸ் புயல் காரணமாக நாளை சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Mandous Cyclone: மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சார் ஆட்சியர்கள் தலைமையில் அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது: தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மான்டோஸ் புயலாக வலுவடைந்தது என்றும் நாளை நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று்ம எதிர்பார்க்கப்படுகிறது.