கதை சொல்வதற்காக நயன்தாராவை முதல்முதலில் இங்குதான் சந்தித்தேன் (தாஜ் ஹோட்டல்) என செய்தியாளர் சந்திப்பின்போது விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டதை அடுத்து நயன்தாராவுக்கு 3 கோடி ரூபாயில் தங்க நெக்லஸை விக்னேஷ்சிவனும், 20 கோடி ரூபாயில் பங்களா ஒன்றை விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவும் திருமண பரிசாக அளித்துள்ளனர்.
இன்று இருவரும் சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நயன், உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்.
திருமணமான அடுத்தநாளே விக்னேஷ்சிவன் - நயன்தாரா புதுமணத்தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானிடம் ஆசி பெற சென்றனர். அங்கு தரிசனத்திற்கு சென்ற அவர்கள் இருவர் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு செய்யும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
திருப்பதியில் மாட வீதியில் செருப்புடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது புகைப்பட குழு சென்றது குறித்து செய்திகள் வெளியான நிலையில், விக்னேஷ் சிவன் மன்னிப்புக்கோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது வழக்கு பாயுமா இல்லையா என்ற பட்டிமன்ற விவாதம் தொடங்கிவிட்டது. திருமணமான அடுத்தநாளே திருப்பதி பிரச்சனையில் சிக்கிய புதுமணத் தம்பதிகள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.