இத்தாலி நகரத்தில் ஒரு குறிப்பிட்ட பீட்ஸாவின் விலை 77 லட்ச ரூபாய். உலகின் முக்கிய சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பீட்ஸாவை உருவாக்கி இருக்கிறார்கள்.
உலகிலேயே விலை அதிகமான உணவுப் பொருட்களைப் பற்றி தனியார் உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில் உலகிலேயே விலை அதிகமான பீட்ஸா ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த பீட்ஸா விலை ரூ. 77 லட்சம். இந்த பீட்ஸாவின் பெயர் ‘லூயிஸ் 13' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
பீஸ்ஸா என்ற ஒரு வார்த்தையை மட்டுமே கூறி பீஸ்ஸாவை ஆர்டர் செய்ய முடியும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?
ஆம், இப்போது சாத்தியம்.
அமெரிக்க பீஸ்ஸா உணவகம் செயின் டாமினோஸ், அமேசான் நிறுவனத்துடன் இனைந்து குரல் கட்டுப்பாட்டு உத்தரவுகள் மூலமாக பீஸ்ஸாவினை ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இப்போது வாடிக்கையாளர்கள் பீஸ்ஸா என்ற வார்த்தையை சொல்வதன் மூலம் தங்களின் விருப்பமான பீஸ்ஸாவினை ஆர்டர் செய்ய முடியும்.
இந்தப் புதிய அம்சத்தை பயன்படுத்தி, ஜிபிஎஸ் வழியாக உங்களுக்குப் பிடித்த பீஸ்ஸாவின் இடத்தையும் நீங்கள் கண்காணிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.