கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இனவாத வண்ணம் கொடுப்பதை எதிர்த்து மக்களை எச்சரித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், இத்தகைய நடத்தை மேலும் பல்வேறு சமூகங்களுடன் பழகுவது மிகவும் கடினமாக்கும் என எச்சரித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரை நியமிக்கும் போட்டியில் மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பத்ரா மற்றும் MPC-யின் வெளி உறுப்பினரான சேதன் காட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாக்டர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது சாதாரண விசியம் இல்லை. இதுக்குறித்து அவரிடம் கேட்ட வேண்டும் என முன்னால் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையடுத்து புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆர்.பி.ஐ-யின் 24-வது கவர்னராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று முறைப்படி ரிசர்வ் வங்கியின் பொறுப்பை உர்ஜித் பட்டேல் ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ரி்சர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுராம் ராஜனுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் பெயருக்கு நான்கு பேரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். புது பணக்கொள்கை வகுப்பதற்கான குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிப்பாரா? இல்லையா? என்று விவாதங்கள் நடைப்பெற்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தாம் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை. திரும்ப அமெரிக்காவுக்கே செல்ல இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன், "வரும் செப்டம்பர் மாதத்துடன் எனது பணிக்காலம் முடிவடைகிறது. அதன் பின்னர் எனது பணிக்காலம் நீடிக்கப்படுமா இல்லையா என்பது ஊடகம் மற்றும் சமுகவலைத்தளங்களில் விவாத பொருளாக ஆகியிருக்கிறது. எனவே தற்போது இது தொடர்பாக ஏதாவது கூறி ஊடகங்களின் மகிழ்ச்சியை நான் குலைக்க விரும்பவில்லை.
ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜனுக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் மூலமாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி இரு முறை கடிதம் எழுதிவிட்டார். மேலும் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி வீழ்ச்சி அடைய ரகுராம் ராஜனே பொறுப்பு என்றும், நாட்டின் உயரிய பதவியில் இருந்து தனது அமெரிக்கா கிரீன் கார்டை புதுப்பித்துக் கொள்ள அடிக்கடி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் நீக்ககோரி ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் வால்ஸ்ட்ரீட் எனும் பத்திரிக்கையாளர் மோடியிடம் "ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.