ஆனந்த் பல்கி இயக்க உருவாகி வரும் சர்வர் சுந்தரம் பட டீசர் இன்று வெளியிட்டப்பட்டது. இந்த படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா நடிக்கிறார்கள்.
இசை சந்தோஷ் நாராயணன்.
நாகேஷ் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் டைட்டில் தான் இது. இந்தப் படத்தின் டீசரை சிம்பு வெளியிட்டார். இன்று சிம்பு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷும் படத்தில் இருக்கிறார்.
டீசர் பார்க்க:-
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் முதல் முறையாக சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. டீசர் பார்த்த பலரும் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக புகழ்ந்து தள்ளினர், இந்த டீசர் வெளிவந்த 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.
இயக்குநர் ராமின் 'தரமணி' படத்தின் புதிய டீசர் நேற்று வெளியிடபட்டுள்ளது. இயக்குனர் ராம் இயக்கி இருக்கும் மூன்றாவது திரைப்படம் தரமணி.
இந்த படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இரண்டாவது டீஸர் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் "எனை நோக்கி பாயும் தோட்டா". இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் 2017 தொடக்கத்திலேயே படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்.
பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது மீண்டும் அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாதே’ படத்தை இயக்கியுள்ளார். கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தின் இயக்கி உள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் மிஷ்டி, அனைகா, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. இந்த படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, தன்யா, சங்கிலி முருகன், ரோகினி ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகள்ளன. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிட்டுள்ளனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமான சேது, நடித்திருக்கும் படம் ஆளுக்கு பாதி - 50/50. இந்த படத்தில் ராஜேந்திரன், பால சரவணன், யோகி பாபு, மயில்சாமி, ஜான் விஜய், சுவாமிநாதன், கோதண்டம், தீனா நடித்துளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நரேன், விவேக், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ரம். திகில் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு, அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
#RumTeaser is here - https://t.co/jwbo3ZhGtb .. Please support this new team :)
ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் டீகே இயக்கிய படம் - "கவலை வேண்டாம்". இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். மேலும் பாபி சிம்ஹா, ஆர்ஜே பாலாஜி, சுனைனா, பால சரவணன், மதுமிதா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வருகிற 24-ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என தகவல்கள் வந்துள்ளது. தற்போது இப்படத்தின் மற்றொரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசர்
ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் 'கடம்பன்' படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கேத்ரீன் தெரசா நாயகியாக நடித்துள்ளார், மேலும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
விஜயின் 6௦-வது படமான "பைரவா" படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இந்த பட்டதின் டீசர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ளது. தற்போது "பைரவா படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கௌரி ஷிண்டே இயக்கியிருக்கும் படம் "டியர் ஜிந்தகி" இங்க்லிஷ் விங்க்லிஷ் படத்துக்குப் பிறகு இப்படம் இயக்கியுள்ளர். ஷாருக் கான், அலியாபட் நடித்திருக்கும் இப்படம் நவம்பர் 25-ல் வெளியாகிறது. படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், மிஸ்கின், ராம், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த படதிற்கு அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். இந்த படதின் டீஸர் வெளியாகியுள்ளது.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘கத்தி சண்டை’. இந்த படத்தை சுராஜ் இயக்கயுள்ளர் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். நீண்ட இடைவேளிக்கு பிறகு வடிவேலு நடித்து உள்ளார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.
வீடியோ:-
கடந்தமாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது கபாலி படத்தின் அடுத்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தில்லுக்கு துட்டு'
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தீபக் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 3-வது படம் தான் ‘இறைவி’. இவர் ஏற்கனவே ‘பீட்ஷா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இறைவி படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா, கருணாகரன், ராதாரவி, மற்றும் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.