PPF, SSY, SCSS... சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு: அதிக வட்டி கிடைக்குமா?

Small Savings Schemes Interest Rates: பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2025, 12:40 PM IST
  • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சகம்.
  • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு எப்படி தீர்மானிக்கிறது?
PPF, SSY, SCSS... சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு: அதிக வட்டி கிடைக்குமா? title=

Small Savings Schemes Interest Rates: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.  2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மார்ச்) பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Finance Ministry: அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சகம்

பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“ஜனவரி 1, 2025 முதல் தொடங்கி, மார்ச் 31, 2025 அன்று முடிவடையும் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை) அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் இருந்து மாறாமல் அப்படியே இருக்கும்." என நிதி அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு எப்படி தீர்மானிக்கிறது?

முதன்மையாக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளால் நிர்வகிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கிறது. இந்த வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரம் ஷியாமளா கோபிநாத் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டது. பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களாக அரசாங்கப் பத்திரங்களின் ஈல்டுகளைப் பயன்படுத்த குழு முன்மொழிந்தது. ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி இதில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

Interest rates on PPF, SSY, SCSS: PPF, SSY, SCSS மீதான வட்டி விகிதங்கள்

- Public Provident Fund: சமீபத்திய அறிவிப்பின்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தபால் அலுவலக சேமிப்பு வைப்பு போன்ற பிரபலமான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் முன்னர் இருந்த அளவில் முறையே 7.1% மற்றும் 4% ஆக உள்ளன.

- Kisan Vikas Patra: கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டத்தில் தொடர்ந்து 7.5% வட்டி கிடைக்கும். முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். 

- Post Office Monthly Income Scheme: இதேபோல், முதலீட்டாளர்களுக்கு வழக்கமான மாத வருமானத்தை வழங்கும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS), 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

- Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) அதன் கவர்ச்சிகரமான 8.2% வட்டி விகிதத்தை தொடர்ந்த் வழங்கும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் அதிக வருமானத்தை வழங்குகிறது.

- National Savings Certificate: ஜனவரி-மார்ச் 2025 காலாண்டில், நிலையான வருமான முதலீட்டு விருப்பமான தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), தொடர்ந்து 7.7% வட்டி விகிதத்தைப் பெறும். 

- Post Office Monthly Income Scheme: நடப்பு காலாண்டில், தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் 7.4% வட்டி கிடைக்கும். இது மிதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது.

-  Sukanya Samriddhi Yojana:பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 8.2% வட்டி விகிதம் கிடைக்கும். 

- 3 Year Term Deposit: மூன்று ஆண்டு கால வைப்பு விகிதமும் இந்த காலாண்டில் நடைமுறையில் உள்ள 7.1% என்ற வட்டி விகிதத்தில் தொடரும். 

- 5 Year Recurring Deposit scheme: முதலீட்டாளர்கள் நிலையான மாதாந்திர பங்களிப்புகளைச் செய்ய அனுமதிக்கும் ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டம் (RD) 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இந்த சிறுசேமிப்புத் திட்டங்கள், திட்டத்தைப் பொறுத்து மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வட்டியுடன் கூடிய உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வுடன் 18 மாத அரியர் தொகையும் வருது

மேலும் படிக்க | EFPO Withdrawal Rules: வீடு வாங்க, பழுது பார்க்க PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வழிமுறையும் விதிகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News