வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை கூட மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வாடிக்கையாளர்களை படம் பிடித்து வந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளதால் இதை சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார்.
திரிபுராவின் முதல் மந்திரி மாணிக் சர்க்கார் அவர்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமுகவலைத்தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'உலக கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கவுன்சில்' சார்பில் ஒரு போலி பேஸ்புக் கணக்கின் மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டு இருந்ததாவது "மாணிக் சர்க்கார்" -யை கொல்பவருக்கு ரூ .5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பதிவிட்டு இருந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை, இந்த கொலை மிரட்டல் பதிவானது போலி பெயரைப் பயன்படுத்தி பதிவிட்டிருப்பதாக கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.