முந்தைய ஆப்கான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவை இப்போதைக்கு செல்லுபடியாகும் என்று ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் கூறியுள்ளது.
ரஷ்யாவின் பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றில் திங்கள்கிழமை (செப்டம்பர் 20, 2021) 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட தாலிபான் மூத்த தலைவர் காரி பாசிஹுதீன், நாட்டில் விரைவில் "வழக்கமான மற்றும் ஒழுக்கமான" இராணுவம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
சிக்கன் பேரண்டிங் ஒரு வினோதமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இதில் பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'கோழி இரத்தம்’ கொண்ட ஊசியை செலுத்துகிறார்கள்.
பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் வட கொரியாவின் 73 வது நிறுவன ஆண்டு விழாவை கொண்டாடும் "துணை ராணுவ மற்றும் பொது பாதுகாப்பு படைகளின்" படங்களை வட கொரியா வெளியிட்டது.
சீனாவில் உள்ள அரசு விஞ்ஞானிகள், தண்ணீர் மூலம் குளிரூட்டப்படாத சோதனை அணு உலைக்கான வடிவமைப்புகளை வழங்கியுள்ளனர். இதன் மூலம், சீனா தண்ணீர் இல்லாத அணு உலையின் முதல் சோதனைகளைத் தொடங்குகிறது என்பது உறுதியாகியுள்ளது
இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் இந்தியாவைப் பற்றி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது...
டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு 2020 தொடக்க விழாவில் ஆப்கானிஸ்தான் கொடி சேர்க்கப்படும் என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (International Paralympic Committee) தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்தார். அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாவிட்டாலும், ஆப்கன் கொடி போட்டியில் சேர்க்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ச்ஷிர், தாலிபான்களுக்கு சவாலாக உள்ள ஒரு மாகாணமாகும். கானி அமைச்சரவையின் முதல் துணைத் தலைவர் அம்ருல்லா சலேஹ் மற்றும் அஹ்மத் மசூத் ஆகியோரது தலைமயில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழுவின் மையப்பகுதியாக இது விளங்குகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்னர் பல முன்னாள் அரசு அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துதனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.