காபூல்: இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதிதாக அரசாங்கத்தை அமைத்துள்ள தாலிபான், முக்கிய பதவிகளுக்கான பெயர்களையும் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் (Afghanistan) பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டைகள் (NIDs) ஆகியவற்றில் "ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம்” என்ற பெயர் இருக்கும் என்று புதிய தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாச்சார துணை அமைச்சரும், தாலிபானின் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித், “ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் NID களில் ’ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம்’ என்ற பெயர் இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறியதாக, காமா பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ: PoK-வை முதலில் காலி செய்யுங்கள்: UNGA-வில் பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டமான பதில்
இதற்கிடையில், முந்தைய ஆப்கான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவை இப்போதைக்கு செல்லுபடியாகும் என்று ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாச்சார துணை அமைச்சரும், தாலிபானின் (Taliban) செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித், முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் நாட்டின் சட்ட ஆவணங்களாக இன்றும் செல்லுபடியாகும் என்று கூறியதாக காமா பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாஸ்போர்ட் மற்றும் என்ஐடி துறைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. தங்கள் பயோமெட்ரிக்ஸ் செயல்பாட்டை முடித்தவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் மற்றும் என்ஐடி-ஐப் பெற முடியும்.
ALSO READ: கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR