ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி இயக்கங்கள் குறித்த பட்டியல் ஒன்றை நேற்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. அந்த
பட்டியலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பயங்கரவாத இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுவது, கிளர்ச்சி இயக்கங்களுடன் உறவு வைத்திருப்பது என பாக்கிஸ்தானை சேர்ந்த 139 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதில், அல்-காய்தாவின் தற்போதைய தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி, இந்தியாவில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம், பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பில் இருக்கும் ஹபீஸ் சயீத், அவரது பிரதிநிதிகள் அப்துல் சலாம் மற்றும் ஜஃபர் இக்பால். பாக்கிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் அல்லது அல் ரஷீத் டிரஸ்ட், ஹர்கட்டுல் முஜாகிதீன், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், வாபா மனிதாபிமான அமைப்பு, ஜெ.எம்.எம், ரபிடா டிரஸ்ட், உம்மா டைமீர்-இ-நவ், ஆப்கானிய ஆதரவு குழு, இஸ்லாமிய மரபு சங்கத்தின் மறுமலர்ச்சி, லஷ்கர்- இஸ்லாமிய ஜிகாத் குழு, அல் அக்தர் டிரஸ்ட் இண்டர்நேஷனல், ஹர்குடுல் ஜிஹாத் இஸ்லாமி, தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான், ஜமாதுல் அஹ்ர்ர் மற்றும் காதிபா இமாம் அல்-புகாரி போன்ற அமைப்புகள் ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் உள்ளன.
எங்கள் நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படவில்லை எனக்கூறி கொண்டு பொய் வேஷம் போட்டு வந்த பாக்கித்தானின் முகத்திரை கிளிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை குறித்து பாக்கித்தான் தரப்பில் இருந்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.