தமிழ் திரையுலகிற்கு ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். தனது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு மக்கள் மத்தியில் கிடைத்தது.
அதை தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவி-க்கு ஜோடியாக நடித்துள்ள டிக் டிக் டிக் படமும் விரைவில் வெளிவரவுள்ளது. இது மட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இதை தொடர்ந்து, நடிகை நிவேதா பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
ஆனால், உண்மையில் அது நிவேதாவே இல்லை, அது ஒரு பாலிவுட் மாடல், அவர் பெயர் Hritu. இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது நிவேதா தான் என குழம்பிவிட்டார்கள்.
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தற்போது இவர் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது...!
உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் மீதான பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நெருங்கிய உறவுகளால் தான் நேர்கிறது என்றும் கூறினார்.மேலும், தானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானாதாகவும் அதிர்ச்சி தகவலையும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் கொடூரமாக ஜம்மு காஷ்மீர் சிறுமி பாலியல் கொடுமை-க்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தான் இந்த வீடியோ-வை நிவேதாக தெரிவித்தார்.