ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்திற்கு மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் நேற்று (செப். 1) வருகை தந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மத்திய அமைச்சரை குறிப்பிடும் போது, "ஒன்றிய அமைச்சர்" என குறிப்பிட்டதால் அங்கிருந்த பாஜக தொண்டர்கள் நவாஸ் கனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.